காதல் என்பது யாதெனில்

என் கவிதைகளின் வரிகளாய் அல்லாமல்
பொருளாய் ஆனாயே பெண்ணே...

கடைப் பார்வை வீசுவது காதல்
கண்டப்பின் நாணுவதும் காதல்!

தலைத் துவட்டுவது காதல்
துவண்டப்பின் கை தூக்குவதும் காதல்!

தோள் கொடுப்பது காதல்
தோல்வியில் துணை நிற்பதும் காதல்!

வெறுப்பு உமிழாது காதல்
வெற்றியில் கண் மாரி பொழிவதும் காதல்!

பனியில் போர்த்துவது காதல்
பணியை குறைப்பதும் காதல்!

நேர்மறை நேசிப்பது காதல்
எதிர்மறை ஏற்பதும் காதல்!

தனிமையில் நினைவலைகள் பேசுவது காதல்
கைப் பிடித்து தனிமையில் நடப்பதும் காதல்!

கலங்க விடுவது காதல்
கண்ணைத் துடைப்பதும் காதல்!

மூண்றாதவர்கள் உரிமைக் கோர விடாது காதல்
வலிக்கு வருடலும் காதல்!

நம்பிக்கை விளைவிக்கும் காதல்
இதயத்தின் இன்பம் இதழ்கள் சொல்லுவதும் காதல்!

உறங்க மடி கொடுப்பது காதல்
ஊன்றுகோல் கொடுப்பதும் காதல்!

எதிர்ப்பார்த்து வருவது அல்ல காதல்
எதிரே இல்லாமல் இருந்தாலும் வருவதே காதல்!

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (23-Mar-19, 3:58 pm)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 233
மேலே