வானமவன் கரைகிறான்

புகை கக்கும் மாசினமே
புவி வேகும் காரணமே!!!

சிகை கூட தப்பாத
சீர்கேட்டின் சாதனமே!!!

பார் மின்னும் பல்லொளியாய்
வெளிறி நின்ற வெண்மேகம்!!!
கார் துப்பும் கரும்புகையால்
கார்மேகம் ஆனதன்றோ?

சினம்கொண்ட மனம்கூட
கனம் தாழா கரைவதுபோல்..
சீற்றெழுந்த வானமவன்
காற்றழுத்தத் தாழ்வுதனை,
அம்பென்ற ஆயுதமாய்
வம்பென்று வழியனுப்ப .

சிந்துகின்ற துளியெல்லாம்
முந்திச்செல்லும் விந்தணுவாய்
கரை தாக்கும் பேரலைபோல்
பகை தீர்க்கப் பாய்ந்து வர

அம்பென்ற ஆயுதத்தை
அன்பென்ற ஆயுதமாய்
பரவச்செய்தாள் பருவமகள்.
பரவசத்தின் தெய்வமகள்.

கொட்டித்தீர்த்த பேய் மழையில்
பிணக்கோலம் காணவேண்டி,
கெட்டிமேளச் சத்தத்துடன்
மணக்கோலம் கண்டிடவே

பொய் சிரிப்பில் பொங்குகிறான்
பகை தீரப் புலம்புகிறான்

இது தரை துடைக்கும் தண்ணீர் அல்ல.
என் கரை உடைந்த கண்ணீர்.

-----------------*இராச வானம்*--------------------

எழுதியவர் : இராசா (30-Mar-19, 1:47 pm)
சேர்த்தது : Pulamai pithan
பார்வை : 2900

மேலே