அடியே கடத்தியே அழகான சிறுக்கியே

அடியே கடத்தியே அழகான சிறுக்கியே
மயக்கும் சிரிப்பாலே மாமாவ கவுத்தியே

என்னோட மாமாவே எனக்கினு பிறந்தாயே
உன்னோடு வாழத்தான் உடல் எடுத்து வந்தேனே

பொன்னுக்குள்ள வைரத்த வச்சி புதைத்த கண் கொண்டவளே
பொக்கிஷ பெண் மயிலே பூவாசம் நிறைந்தவளே

அழகான ஆண் மகனே என் அத்தைக்கு பிறந்தவனே
பித்தாக்கி வைத்தவனே பெண்ணுக்கெல்லாம் பிடித்தவனே

வெண்சங்கு உன் கழுத்தில் எச்சில் முத்தம் வைக்கணும்டி
வெள்ளைக்காரன் முத்தத்தை விட அது வீரியமாய் இருக்கும்டி

ஆசையாலே அலையாதே ஆபாசமாய் பேசாதே
ஆத்தோர ஆலமரம் நம்ம அக்க போருக்கு காத்து கிடக்கு

தோதான தோளழகி தோட்டத்து வாழை காலழகி
சுவையான சொல்லழகி சுடுயேற்றி பேசுரடி

கார்மேக கருத்த மச்சான் கண்ணுக்குள்ள காமத்த வைச்சான்
கையினாலே என்னை அணைச்சி காணாத சுகத்த கொடுத்தான்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Apr-19, 9:57 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 209

மேலே