மகரந்தத் துளி

தீண்டாத நாட்களில்
திகட்டாத இன்பம்
தினம் தினம்
தித்திக்கும் மாற்றம்

வெண்பனி சிதறலில்
வெண் முத்துக்களை
கடல்கொண்டு வேட்டையாட
காதலியவள் வாய்பளிப்பாளோ

வாஞ்சையுடன் வஞ்சியவளை
வத்திகுச்சியாய் நெருங்கிடவே
வெண்மை தொலைத்து
கருமை பூசிடவே

காமன் அம்புகள்
காயம்தான் செய்திடுமோ
காதல் வண்டு
காமத்தூண்டில் வீசிடுமோ

இரவாத இரவொன்றில்
இணைந்த ஈருடலுமே
சாரைப் பாம்பாய்
சல்லாபத்தில் திழைத்திடுமே

சிதறாத சிற்றின்பம்
சிவக்காத பேரின்பம்
வதனம் வாடாமல்
வற்றா நீரோட்டம்

பஞ்சணைகள் பறந்திடுமோ
பகல்நிலவும் தோன்றிடுமோ
பார்வைகள் மறைத்திடுமோ
பண்புகள் கரைந்திடுமோ

நீர் முத்துக்கள்
நீந்த மறுத்திடுமோ
மஞ்சள் மேனியதும்
மஞ்சத்தில் துவண்டிடுமோ

எழுதியவர் : சா.மனுவேந்தன் (2-Apr-19, 9:20 am)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 124

மேலே