என் ரமணன்

என் ரமணன்
**************************

ஆறுமுறை உடலறுத்தும் அருள்முகத்தில் வாட்டமில்லை
சாருகின்ற சஞ்சலர்க்கும் சாந்திதரச் சலிக்கவில்லை
வெறும்பய வீணனெனை புவியோர்கள் வெறுத்தாலும்
ஆறும்வகை அவனடியே ஆக்கினனே என் ரமணன் !

( ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய )

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Apr-19, 11:34 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 84

மேலே