பூமி ஒர் அனுபவ கிடங்கு
பூமி ஒர் அனுபவ கிடங்கு
உதிர்ந்த இலைகண்டு
நிமிர்ந்த மரங்கள்
அதிர்ந்து போவதில்லை
அழகிய மலர் கொய்து
தலைசூடும் பெண்கண்டு
கிளை அறுத்துக்கொள்வதில்லை செடிகள்
கால்கடுக்க ஓடி கடல் கூடும் ஆறும்
கரித்து போவேன் என சலித்துக்கொள்வதில்லை
தேய்கிறேன் என தெரிந்தும்
பிறை நிலவு பின்வாங்குவதில்லை
மீனற்ற ஆற்றிலும்
தவம் கிடக்குமே கொக்கு
என்றேனும் கலையுமே
என தெரிந்தும்
துளித்துளியாய் சேர்க்கும் தேனீ
ஓய்வின்றி பறந்து
ஒரேநாளில் இறக்கும் தும்பி
முட்களின் நடுவிலேதானே
ரோஜாவும்
அழகுநிறை மயில் உயரே
பறப்பதில்லை
அழகற்ற குயில் உயரம் கண்டு
மயில் அழுவதில்லை
ஆலம் பழத்தை உயரே படைத்தான்
பூசணிக்காயை தரையில் படைத்தான்
இவையெல்லாம் இயற்கையின்
இலக்கணங்கள்
அனுபவம் எங்கேயும் இல்லை
தேடுவதற்கு
புதிதாக எதுவும் இல்லை இவ்வுலகில்
புரிந்துகொள்ள
பூமித்தாயின் ஒவ்வொரு பரிணாமமும்
ஒவ்வொரு அனுபவமே