இயற்கை

கொஞ்சம் கூட சிந்தனை ஏதும் செய்யாமல்
கானகங்களை அழிகின்றான் மனிதன்......
மனிதா உனக்கு என்றும் நன்மையே தந்திடும்
மரங்களை வெட்டி அழிக்கின்றாய் அழித்த
இடத்தில் புது நகரம் அமைய, வளர
காட்டு விலங்குகள் பாவம் போன இடம் தெரியாது
மறைய, காட்டையே நம்பி வாழ்ந்துவரும்
ஆதிவாசிகள் , வாழ வழிதெரியாது ஓட
இயற்கையோடு ஒன்றிவாழாது இப்படி
போர்க்கோலம் போட்டு மோதினால்
மனிதா உன்னைப் பார்த்து நாளை
இயற்க்கை எள்ளி நகைக்கும் , உன் அழிவை
இப்படி நீயே தறிகெட்டு அலைந்து தேடிக்கொண்டால்
இயற்கையின் சீற்றம் தெரிந்தும் இப்படி
உன் செய்கைகள் அமையுமானால், நாளை
உன் அழிவுக்கு நீதான் பொறுப்பு
கடவுள் அல்ல, 'அவன்' உனக்கு எல்லாம்
தந்தும் நீயோ அகந்தையால் ராவணனாகின்றாய்
உன் அழிவைத்தேடி ...... இது அவலம்

வளமான இயற்கை நலம்தரும் சுற்றுச் சூழ்நிலை
நம்மை என்றும் வாழவைக்கும்
காடுகளைக் காப்போம் அவற்றிற்கு பல்லாண்டு
பாடுவோம் வளமான மண்ணைக் காப்போம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Apr-19, 6:39 pm)
Tanglish : iyarkai
பார்வை : 278

மேலே