தேவதூதன்
தேவதூதன்
என் கனவில், அவன்,
சப்தஸ்வர மணிகளுக்கிடையில்
நின்றிருந்தான்
அப்போது தான்,
அவனை சந்திக்கப் போய்க் கொண்டிருக்கிறேன்
முடிவடையாத நீள் கோடுகளை
எதைக் கொண்டு
முடிக்கலாமென யோசிக்கிறேன்
யாரோ நடந்து நடந்து
முழுமையாக்கிச் செல்லாத பாதைகளை
என் கால்கள்
இழுத்துக் கொண்டேப் போகின்றன..
என்றோ
தொலைந்துபோனவனுடைய
முகச் சித்திரத்தைப் பார்த்து
தற்போது எப்படி இருப்பானோ என
தானோற்கிறேன்
முன்வசத்து முடி
கொஞ்சம் உதிர்ந்துகாணும்
குறுகிய கண்களை உடையதுக்கொண்டு
முகம் எப்போதும்
உயர்த்திப் பிடித்தது மாதிரியே
அவன் நடக்கக் கூடும்
அந்தத் தலையெடுப்பு
அதை இன்னும்
என் கண்முன்னால் உணருகிறேன்
முகத்தில்
வரிகளும் சுழிவுகளும் விழுந்திருக்கலாம்
என்னாலும்
கண்களில் அந்தத் திளக்கம்
கொஞ்சமும் குறைந்திருக்காது
எங்கோ இருந்துகொண்டு
என்னை இப்போதும்
நினைத்துக் கொண்டிருக்கலாம்
பிரிவானது
ஒருமுறை நேரும்போது தானே வலி .. முறைக்குமுறை நேரும்போது
அது சுகம் .. சுகமரணம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
