பை சொன்னாள்

"பை" சொன்னாள்.
==========================================ருத்ரா


இன்று தான்
கைகோர்த்துக்கொண்டு
என்னுடன் வந்தாய்.
அந்த சின்ன நகரத்தின்
குட்டிப்பூங்கா கூட
நமக்கு பொன்மரங்களில்
வைரப்பூக்கள் சிதறும்
காட்சிகளை நல்கின.
தென்னிந்தியாவிலேயே
உயரமான
ஊட்டியின் தொட்டபெட்டாவின்
குளிர்ச்சியை
ஸ்பர்சிக்க வைத்தது
உன் குளிர்முகம்.
நீ உதிர்த்த அரைகுறை சொல்லும்
"ஆல்ப்ஸ்" மலைத்தொடர்
நெடுந்தொகையின்
பனிப்பளிங்கு சொற்கள்.
பிரிய மனமின்றி "பை" சொல்லிவிட்டு
கிளம்பி விட்டாய்.

உஸ்ஸ்..
அடே அப்பா! என்ன வெயில்.!
சட் என்ன மோசமான ஊர் இது!
செல் போனில்
கிணு கிணுத்தாள் அவள்..
மீண்டும் "பை "சொன்னாள்.
குளிர் முகம் காட்டிய அவள் முகம்
மறைந்து போனது.
அப்புறம் தான்
செல்போன் காட்டியது
எனக்குத் தெரிந்தது.
"நூத்தி அஞ்சு டிகிரி" என்று.
என்ன படு மோசமான வெயில்?
தன்னந்தனியே திட்டித்தீர்த்துக்கொண்டேன்
இந்த ஊரை.
வேக வேகமாக தேடி ஓடினேன்.
அவளை அல்ல!
தர்பூசணி விற்கும் அந்த
தள்ளுவண்டிக்காரனை நோக்கி!

=====================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (12-Apr-19, 7:21 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : bai chonnaal
பார்வை : 55

மேலே