கரு நிலவே
***கரு நிவவே***
இல்லம் நாடிய கரு நிலவே!
உள்ளம் வருடிய மயிலிறகே!
உன் வரவு எங்கள் நல்வரவு!
காணாமல் தவித்தேன் நேற்றிரவு!
ஓடி வருவேன் வெகு விரைவில்!
தேடி விளையாடுவோம் புல்வெளியில்!
சுடும் வெயிலின் குளிர் காற்றே!
'சுட்டி' என்ற பெயர் போதுமா?
உன்னிடம் கொஞ்சி பேசிட ஆசை !
கேட்டால் இனிக்கும் உன் ஓசை!
உன் ஏக்கமான பார்வைகள்!
என் பாசமான தலை கோதல்கள்!
என் முத்தங்களை அள்ளி
உன் தாயிடம் முறையிடுவாயா..!
கொஞ்சியது போதாதென்று
கெஞ்சி அடம்பிடிப்பாயா!
காலம் கனிய காத்திருக்கிறேன்
கருநிலாவை கனிவுடன் காண...!
***அக்னி நிலவன்***