தோழிக்காக ஒரு கவிதை - பகுதி 2

நானும் தோழியும் பேசுகையில் - நான்

அவளிடம் என்னிடம் என்ன பிடிக்கும்

என்று கேட்டு முடிக்க, சிரிக்காமல்

சிந்தித்து கண்கள் தனை நேராய் பார்த்து

பெண்கள் சிரித்து பேசி பழகி விட்டால்

காதல் என்று அர்த்தம் கொள்ளும்

ஆண்கள் நடுவில் இத்தனை நாள்

நான் பழகியும் சிரித்து பேசி பிரிந்த போதும்

நட்பில் காதல் சொன்னதில்லை

சொல்லும் எண்ணம் உனக்கு வந்ததில்லை

அந்த குணத்தை ரொம்ப பிடிக்கும்

உன் நட்பின் நேசம் மிகவும் பிடிக்கும்

என்று சொல்லி முடித்தாள்

முடித்ததும் கொஞ்சம் சிரித்தாள் - அவள்

மீண்டும் ஒரு கேள்வி கேட்டு பேச்சை

அவளே தொடங்கி வைத்தாள்

என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும்

என்று கேட்டு முடிக்க பதில் தெரியாதது போல்

நானும் நடிக்க சொல்லி தீரவேண்டும் என்று

செல்ல கோபம் கொண்டு கடிந்து கொண்டாள்

சொல்ல நானும் தொடங்கினேன்

நெடுநாள்ஆசை என்று உண்டு ஆண் பெண்

நட்பு, அண்ணன் தங்கையாக இன்றி

காதலர்களாக இன்றி நட்பு மட்டும்

முகவரி என்று நேசிக்க பிடிக்கும் உந்தன்

மனதை நிஜமாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்

என்று நானும் சொல்லி முடிக்க

தோளில் கை போட்டு கொண்டாள்

நண்பன் என்று பாசம் மீண்டும் கொண்டாள்

நிஜமாய் நானும் சொல்லி கொண்டேன்

யாருக்கும் கேட்காமல்

மனதிருக்கு மட்டும் கேட்குமாறு

நிஜமாய் என் தோழி நீ வாழ்நாள்

முழுதும் உன் நட்பு வேண்டுமென்று ...




தோழிக்காக ஒரு கவிதை தொடரும் .............


எழுதியவர் : rudhran (3-Sep-11, 7:28 pm)
பார்வை : 605

மேலே