அவள் வேறு மாதிரி

அவள் வேறு மாதிரி

அவள்
காதலை ஆழமாக்க
கண்ணீர் விட்டுத் தோண்டுபவளாய்….…

மலர்கள் மலர்வதனை
இதழில் பதிவு செய்து
காட்டுபவளாய்……..…..

பஞ்சு படர்வது போல்
மெல்லென நடை
பயில்பவளாய்……..

பொறுமையின் ஆணிவேரில்
மெளனம் ஊற்றி
வளர்ப்பவளாய்………

பொருள் பொதிந்த சொற்களினால்
செவியை நனைக்கும்
நாவன்மையளாய்……..

என் உடலில் உயிர் எங்கெனவே
அவள் அசைவால்
உணரச்செய்பவளாய்…

அன்பை சுமப்பதில் அடிமையாய்……
என் நெஞ்சை ஆள்வதில்
எஜமானியாய்……

என் உடலில் உயிர் எங்கென
அவள் அசைவால்
உணரச்செய்பவளாய்…

சு. உமா தேவி

எழுதியவர் : சு.உமாதேவி (23-Apr-19, 12:13 pm)
Tanglish : aval veru maathiri
பார்வை : 322

மேலே