எனக்குள் வெகுதூரம்

எனக்குள் வெகுதூரம்

எனக்குள் செல்கிறேன்
வெகுதூரம்….
வழி நெடுக இருளின் கரங்கள்
என் கரம் பற்றிக் கொள்கின்றன்……

எங்கும் காடாகிப் போன
மெளன விருட்சங்களின் கிளைகள்
என் தலை தடவிப் பார்க்கின்றன…..

என் அடிகளின் ஒலிகள்
நிசப்தங்களின் உறக்கத்தை
களைத்துக் கொண்டே நீள்கிறது….

அங்கே என் நினைவுகள்
நிர்வாணமாய் சூணியத்துக்குள்
சிறையிடப்படுகின்றது….

வெறுங்கை வீசித் திரும்புகிறேன்
“நான்” என அங்கே
எவரும் இலாது....



பாதையிலா ஊருக்கு ……
முடிவிலாப் பயணமாய்….
முடிகிறது எனது தேடல்……

சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (29-Apr-19, 10:09 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 120

மேலே