பார்வை என்னும் காதல் மொழி
யாருக்கு தெரியும் நான்
அவளை பார்ப்பேனென்று
யாருக்கு தெரியும் அவள்
விழிகளின் பார்வை என்னை
சுட்டுவிடுமென்று என் இதயத்தை !
நான் அவளை நோக்க அவள்
என்னை நோக்க எங்களிடையே
ஓர் புது உறவு அரும்பியது
அதுதான் காதல் என்று
என் மனமும் சொல்லியது
அவள் என் இதயத்தைப் பற்றிக்கொண்டாள்
அவளை நான் அறியேன்
அவள் யாரோ எந்த ஊரோ நானறியேன்
அவள் பேசும் மொழியாதோ நானறியேன்
அவள் மதம் யாது ஜாதியும் யாதோ நானறியேன்
அவளும் அப்படித்தான்
ஆனாலும் நாங்கள் இப்போது பேசிக்கொண்டோம்
எங்கள் மொழி எங்கள் கண்களில்
அந்த பார்வையில், அதன் அசைப்பில்
பேசும் அவள் இதழ்களில் அதன் ஓரத்தில்
சிந்தும் காதல் தேன் சொத்துக்களில்
அந்த புன்னகைத்தேன் மொழியில்
காதலுக்கு பேசும் மொழி இன்னும்
யாது வேண்டும் போதும் போதும்
இது ஒன்றே எங்களை வாழ்வில் சேர்க்க
எங்களை வாழவைக்க