இளைய சமுதாயமே விழித்திடு
இளைய சமுதாயமே விழித்திடு.....
ஏர்பிடிப்பவன் முதுகில்
ஏகப்பட்டக் கடன்சுமை
ஏய்த்து பிழைப்பவனுக்கு
வெளிநாட்டில் உல்லாச உப்பரிகை
கல்வியும் மருத்துவமும்
வசூல்வேட்டை தொழிலகம்
அரசியலும் அதிகாரமும்
அவற்றிர்க்கே பின்புலம்
சாதிமத அடிப்படையிலே
சகலமும் கோரும் சங்கங்கள்
வேத சாஸ்திரங்களே
பேதம் விதைத்த பங்கங்கள்
ஆடையை அவிழ்த்தாடத் துணியும்
அவசியமற்ற டிக்டாக் செயலி
ஆடவர்கள் இச்சையைத் தூண்டும்
ஆபாச விசம உயிர்க்கொல்லி
உச்சநீதிமன்றம் தீர்ப்பே
கேள்விக்குறி ஆகும் தருணம்
உயர் திருமணபந்தக் கட்டமைப்பே
உடைந்து சீரழியப்போவது நிரூபணம்
இல்லாமை இயலாமை முயலாமை
இந்தியக் குடிகளின் கையிருப்பு
இலவசங்களை அள்ளித் தெளிக்கும்
அரசே அத்தனைக்கும் தார்மீகப் பொறுப்பு
விலைபேசி வேடம் ஏற்போர்
கலை வளர்க்கும் தியாகி
காலாவதி ஆனப்பின்பவர்
போடும் வேடம் அரசியல்வாதி
இளைய சமுதாயமே...
சீரழிக்கும் செயலிகளை சிந்தையில் நொடி
சாதிப்பிரிவுகளை சாட்டைக் கொண்டு அடி
வெள்ளாண்மை செழிக்க ஏர்தூக்க படி
தேசமே அணிவகுக்கும் உன் ஆணைப்படி!
கவிதாயினி அமுதா பொற்கொடி