வேண்டியது

அடிபம்பில் தண்ணீர்
அளவு குறைவாய் வந்தாலும்,
அது
குடிக்க உதவுகிறது
குறைக்கிறது தாகத்தை..

கண்ணுக்கெட்டா தூரம்வரை
கடல்நீர் இருந்தாலும்
குடிப்பதற்கு உதவாததால்
கடந்துவிடுகிறோம்
கை கழுவிவிட்டு..

உருவில் பெரிதானாலும்
உதவாவிடில் சிறிதும்,
உதறப்படவேண்டியது
உண்மைதானே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Apr-19, 7:31 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vendiyathu
பார்வை : 60

மேலே