காற்றிலும் மெல்லியாளே
அழகிய இளம்புயலே
அருகில் நீ வந்த பொழுது
அனைத்து உணர்வுகளும்
அதிர்ந்தே போனதடி
சிவந்த உன் உருவம்
சிலிர்ப்பைத் தந்ததடி
சீரான உன் பற்கள்
சிந்தையை சிதைத்ததடி
வேல் போன்ற விழிக்கொண்டு
நோக்குகின்ற நேர்ப்பார்வை
நுண்ணிய செய்தியை என்
திண்ணிய இதயத்தினுள் செலுத்துதடி
காற்றிலும் மெல்லியாளே
கடும் வெண்மை மனத்தாளே
காதல் நோயை தீர்ப்பதற்கு
கட்டிபுடி வைத்தியம் செய்வாயோ.
- - - நன்னாடன்