இரண்டு இரவுகள்
ஏன்டா பொன்னையா, அங்க பாரு. ரண்டு பொண்ணுங்க வர்றாங்க. அவுங்க யாருடா?கண்ணுச் சரியாத் தெரியாததால அவுங்க மூஞ்சி மங்கலத்தெரியுது.
@@@@@
அவுங்க ரண்டு பேரும் இரண்டு இரவுகள், பாட்டி.
@@@@
என்னடா சொல்லற?
@@@@
உங்க பேத்திங்க ரண்டு பேருந்தான் வர்றாங்க.
@@@@@
'நிசா'(நிஷா)வும், 'விபா'வும் எம் பேத்திங்க. எதுக்கு ரண்டு இரவுகள்னு சொன்ன?
@@@@
அவுங்க ரண்டு பேருங்களுக்கும் ஒரே அர்த்தம்.
@@@@
என்ன அர்த்தம்?
@@@@
'இரவு'ன்னு அர்த்தம்.
@@@@
செவச்செவனு தங்க ரதம் மாதிரி இருக்கிற பொண்ணுங்களுக்கு 'இரவு'னு அர்த்தம் தர்ற பேரையா வைக்கிறது. பைத்தியகாரத்தனம்டா பொன்னையா.
@@@
படிச்ச தமிழர் வழில உங்க மகனும் மருமகளும் போறாங்க பாட்டி.