திசை மாறிய கூட்டம்

திசை மாறிய கூட்டம் 🐒

இருப்பதை தக்கவைத்துக்கொள்
நிற்காமல் ஓடு
நின்றால் வேறு ஒருவன் நிச்சயம் உன் வாய்ப்பை
தட்டி பறித்திடுவான்
போட்டி நிறைந்த உலகம்.
உஷார்!!
இதுவே அனைவருடைய வேத வாக்கு.

ஒடுவதின் நோக்கம்
பொருள் ஈட்ட மட்டும் தான்
தேவைக்கு அதிகமாகவே பொருள் ஈட்டிய பின்பும் ஏன்
இன்னும் அந்த மயக்கம்
ஆசையா, பேராசையா.

ஓடும் குதிரை போல் எங்கேயாவது நிச்சயம் நின்றாக வேண்டும்.
நின்றவன் பெறு மூச்சு வாங்குகினான்.
அதீத முச்சிரைக்க திரும்பி பார்க்கிறான்...
ச்சே! பணத்தை தவிர வாழ்க்கையில் என்ன கண்டேன் .

ஆசை மனைவியிடம் மனதார அளாவி பல வருடங்கள் ஆகிவிட்டது.
பெற்ற பிள்ளைகளை பராமரிக்க நேரமில்லை .
தாய் தந்தையிடம் அன்பு செலுத்த முடியவில்லை.
உடன் பிறந்தவர்களை உதாசீனப்படுத்தி, சொந்தங்களை மதிக்காமல், நண்பர்களை மறந்து
எள் அளவும் இயற்கையாக வாழாமல்
செயற்கையாக வாழ்ந்துவிட்டேனே.

அந்த மரத்தில் வாழும் ஜோடி பறவைகள்
மூக்கோடு மூக்குரசி
காதல் பாஷைகள் பேசுகின்றன
ஆனந்த களியாட்டம் நடத்துகின்றன
ஐந்தறிவு படைத்தவை
இயற்கையோடு ஒன்றி மகிழ்ச்சியாக வாழ்கின்றன.
ஆறு அறிவு மானுடம்
இயற்கை விட்டு விலகி
நவநாகரிக நரக போர்வையில் புகுந்து பல யுகங்கங்கள்
ஆகிவிட்டது.

நான் மட்டுமா திசை மாறினேன்
இல்லையே
என் முன்னாலும், பின்னாலும்
பெருங்கூட்டமே உள்ளதே
இதோ இந்த நிமிடம் செய்த தவறை உணர்துள்ளேன்.
இனி நான் வாழப்போவது எவ்வளவு நாட்கள் நான் அறியேன்
இழுந்தது, இழந்தது தான்
இழந்த அந்த சந்தோஷத்தை என் பணத்தால் நிச்சயம் விலைக்கு வாங்க இயலாது.
இனி நான் தொடரும் வாழ்க்கை
இயற்கை ஒன்றிய வாழ்க்கையாக விரும்புகிறேன்.

என் பின்னால் வந்த கூட்டம் மிக வேகமாக ஓடி வருகிறது.
என் அருகே வந்துவிட்டது
ஒதுங்க கூட நேரம் இல்லை
என் மீது ஏறி மிதித்து ஓடி விட்டது
பலத்த காயத்துடன் நான்
தீடிர் ஞானத்தின் ஏற்பட்ட தவறா?
நான் நின்றது மாபெரும் தவறா?

மீண்டும் முருங்கை மரம் ஏறுவானா!
- பாலு.

எழுதியவர் : பாலு (11-May-19, 5:01 pm)
சேர்த்தது : balu
பார்வை : 121

மேலே