தமிழ்

சிங்களப் பருந்து
சீமையின் விருந்து
ஜடை அணிந்த
ஜாதி மறவுற்ற
மானம் கோயில்
மரியாதை மகிழ்கின்ற
செழுமை தமிழனடா!

இனமொன்று குமரி
இகழாமல் மருவி
இதிகாசம் இயல்பான
இன்னிசை இயலடா!

பொதுமறை பண்பும்
பொறாமையற்ற அன்பும்
புகழ்ச்சி இன்றி
இகழ்ச்சி அன்றி
சிரம் தளராத
கொடை தன்மை
பாரியன் செந்தமிழனடா!


பார் போற்றும்
"பா"வகை கவிஞன்
நெஞ்சர் போற்றும்
வாள் வீரனடா!

செப்புக செந்தமிழே
செந்தமிழ் தேன்தமிழோ!
முப்பொழுது படிநிலத்தின்
காவிரி குடில்நிலமே
ஒருமை பிழைநீக்கிய
கரந்தையென்றும் முத்தமிழோ!


சல சல
மொழி உணர்வில்
இரட்டைகிளவி வழியக
மொழி என்
தாய்மொழி பைந்தமிழே!!!!!""
கவிஞர் க.காளீஸ்வரன்

எழுதியவர் : கவிஞர் க.காளீஸ்வரன் (12-May-19, 12:03 pm)
சேர்த்தது : செந்தமிழ் புலவன்
Tanglish : thamizh
பார்வை : 281

மேலே