ஆசையே

மண்ணிலிந்தக் காதலது வந்து விட்டால்
மலர்ந்திடுமே இருவரிடம் பற்பல ஆசைகள்,
எண்ணம்போல் வாழ்வுவர இவர்கள் ஆசை
எதிர்ப்புகள் வரவேண்டாம் என்பதில் ஆசை,
கண்களுக்குள் நிறைந்திருக்கும் கணக்கிலா ஆசை
காவியமாய் வென்றிடத்தான் காதலர் ஆசை,
எண்ணந்தான் தூயதாகி அன்பால் இணைந்தால்
எப்படியும் நிறைவேறும் இவர்கள் ஆசையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-May-19, 6:45 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aasaiye
பார்வை : 280

மேலே