தீர்வு

ஜூன் பதினேழு கிளர்ச்சிக்குப்பின்னர்
எழுத்தாளர் சங்கச் செயலாளர்
ஸ்டாலின்கிராடில் வினியோகிக்கப்பட்ட
துண்டுப்பிரசுரத்தில் சொன்னார்,
மக்கள் அரசாங்கத்தின்
நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.
இரட்டை முயற்சி செய்தால் மட்டுமே
இனி அதை மீட்டெடுக்க முடியும்.
இந்த நிலையில்
அரசாங்கமே
மக்களைக் கலைத்துவிட்டு
வேறு மக்களை தேர்வுசெய்வதல்லவா எளிது?

எழுதியவர் : பெர்டோல்ட் பிரெஹ்ட் (23-May-19, 12:59 am)
Tanglish : theervu
பார்வை : 26
மேலே