தேடுகின்றேன்

நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்த அழ்க்கடலை,
உன் அழகான பாதகளால் அன்பாய்,
நீ ஸ்பரிசித்து சென்றதால்,
உறக்கம் இழந்த கடல்
உன் அன்பான ஸ்பரிஸத்தால்,
தன்னை மறந்து,
உன்மேல் காதல் கொண்டது போலும்,
அதனால்,தான் என்னாவோ!
அங்கே வருபவர்களின் பாதங்களை எல்லாம்
உற்சாகம் பொங்கும் அலையாய் வந்து
தொட்டு பார்க்கின்றது;
வந்திருப்பது நீயா என்று!
வந்தது
நீயில்லை என்று உணர்ந்ததும்;
சோகமே உருவாய் திரும்பி சென்றது,
மீண்டும்
உன்னை காண முடியவில்லையே
என்று....

யுகம் யுகமானாலும் உன் முகம்,
பார்க்காமல் ஓயாது இந்த அலை;

எழுதியவர் : பி.திருமால் (24-May-19, 7:00 pm)
Tanglish : thedugindren
பார்வை : 647

மேலே