வியப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
அன்று உன்னைக்
கண்டு
வெட்கத்தில் முகம்
மூட
என் வெட்கம் கண்டு
நீ வியப்பாய்
வெட்கத்தில் இருப்பது
போல்
நான் நடித்தாலும்
அப்பொழுதும்
நீ வியப்பாய்
இன்று
வெட்கமின்றி நான்
நிற்க
எனக்கே வியப்பாய்
வியப்பின்றி நீ நிற்க
எனக்கு
இன்னும் வியப்பாய்
மொத்தத்தில்
வெட்கமும் வியப்பும்
காணாது போக
நின்றுவிட்டேன்
திகைப்பாய்