மறக்காமல் உதவுகிறதோ

பவனி வரும் இறைவனை
பலபேர் சுமப்பதுபோல்
உயிரிழந்த உடலுக்கு வழிகாட்ட
உறவுகள் தோள் கொடுக்கும்,
இறுதி யாத்திரையில் அதற்கு
இருக்க இடம் கிடைக்கும்,
முடிவில் மண்ணுக்குள் புதைத்து
மூடி மறைக்கப்படும்,
இறைவனடி சேர்ந்ததாய்
அது முழுமை பெறும்,
ஒரு மனித உயிரின்
வரலாறு முடிவடையும்

புதைக்கப்பட்ட சடலம்
பூமாதேவிக்கு
பூஜை செய்வதாயெண்ணி
உயிரோடு வாழ்ந்தபோது
தூக்கி வளர்த்தத் தாயைப்போல
தூக்கி சுமந்த பூமி அன்னையை
தானும் இப்போது சுமப்பது
நன்றி மறவாத
நற்செயல் என்பதால் தான்
மண்ணும் மாந்தருக்கு
மறக்காமல் உதவுகிறதோ!

எழுதியவர் : கோ. கணபதி. (26-May-19, 10:06 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 32

மேலே