நா நடுங்கும் சொல்

பசி
கஞ்சிக்கு
வழியில்லா கொடுமை

பஞ்சம்
நஞ்சிக்கும்
வழியில்லா கொடுமை

பட்டினி
கொடுமையிலும் கொடுமை...

உணவே
மருந்தாகும்
விசித்திர நோய் பசி

பசிக்கு
பசி எடுத்தால்
அது பட்டினி

பசியும் பட்டினியும்
கைகோர்த்தால்
அது பஞ்சம்

பாலூட்டும்
அன்னையின்
பட்டினியை
என்ன சொல்லி
நான் எழுத

பால் சுரக்கா
தனங்களில்
வாய் வைத்து
அழும் குழந்தையை
என்ன சொல்லி
நான் தேற்ற...

பசி பட்டினி பஞ்சம்
நா உச்சரிக்கவே நடுங்கும்
மிக கொடுமையான
வார்த்தைகள்...

✍ கவிஞர்
செல்வமுத்து மன்னார்ராஜ்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (28-May-19, 12:03 pm)
Tanglish : naa nadunkum soll
பார்வை : 263

மேலே