மனனம்
உன் அருகில் உயிர்ப்பாய்
நானிருக்க
கண்மூடி தியானமா என
கேட்டேன்
பூவாய்பூத்த புன்னகையூடே
கவிதை மனனம் என
நீயுரைத்தாய்
கவிதை மனனம் செய்யும்
நேரம் இதுவா என கேட்க
நீயுரைத்த பொய்புணர்வை
வேண்டும் வேண்டும் என
மனம் கேட்க
என்னருகில் நீ இருந்தும்
கண்மூடி
உன் கவிதை மனனம்
என் கள்வனே எனவுரைத்தாய்..,
வாய்மூடி மௌனியானேன்
மனனம்
தடைபடக்கூடாதென்று..,