பழுத்த பழம் பவழ நிறம்

செழித்து பழத்த அழகு பழம்
பழுத்த நிறமோ பழுப்பு நிறம்

உழைத்து கொழுத்த கிழத்தினிடம்
சுவைக்க கொடுத்தால் வழக்கு வரும்

பழுத்த பழம் பவழ நிறம் - பெற
தவழும் குழந்தை தாவி எழும்

கிழக்கு திசையில் கதிரு எழும்
களைத்துப் போனால் உலகு விழும்

விழியால் உலகு விழுங்கப்படும்
பழியால் பலம் அழிக்கப்படும்

கழிதல் உலகில் தினம் நிகழப்படும்
புரிதல் நமக்கு பல புகழைத் தரும்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (31-May-19, 7:35 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே