தமிழ்த்தாய் வாழ்த்து
என்றுதித்தாய் என்று அறிகிலார் மாந்தர்
வந்து துதித்தார் உன்வளமையைக் கேட்டு
சென்றெட்டுத் திக்கும் சிறப்புடன் செல்வம்
செய்திருந் தாலும் அவர்சிந்தை உன்மேலே
அன்றற வாழ்வின் ஆய்வறி வாக
அற்புதக் குறளெனும் அணியுனக் களித்தார்
மன்றங்கள் வைத்து மாண்புறு நூலுனக்குப்
புனைந்தார் தமிழே புவிமேல் வாழி!
என்றுதித்தா லும்நீ இளமையிற் குன்றாய்ச்
செம்மையாய்ச் சீருடன் சிறப்புடன் நின்றாய்
மன்றங்கள் போற்றும் மதிப்புரை ஆய்வு
மேற்கொள நின்வழி அறிவிய லாரும்
கன்னிநின் எழுத்தெலாம் கணினியில் கண்டார்
குறைதீர் காலம் நிறைசெய்யு மாறே
மென்றமிழ் ஒளியே மேதினி எங்கும்
இருளகற் றிடுவாய் இசைத்தேன் வாழி!
மென்றமிழ் = software tamil