ஜீனோவின் வெயில்கால இரவு

இனியும் நம்புவதற்கில்லை
என் மூளையை.

அது என்னை படகாக்கி
தன்னை காஸ்கோ வளைகுடாவில்
நிறுத்திக்கொள்கிறது.

ஏற்பட்டிருக்கும் விளைவுகளில்
சலனங்களை ருசுப்படுத்தி
பாப்லர் மரமாக்கி சிரிக்கிறது.

ரூதர்ஃபோர்ட் காகித சிதறலில்
நியூட்ரான்களுக்கு சேவகனாய்
என்னை இருக்க சொல்கிறது.

ப்ளாங்கின் உலகம் தன்
திரைகளை ஒதுக்கும் போது
இந்த மூளை சலவை செய்கிறது
நீ கவிதை சொல் என்று...

எதிரும் புதிருமாய்
ஒளியில் ஒலியை கடத்தும்
அறைக்குள் மிதக்கும் நான்
மார்கழித்திங்கள் என்று தேட...

ராமராஜனுடன் வரப்போரத்தில்
வெயில் காய்கிறது.

நீங்களேனும் வாங்கி கொள்வீர்களா
எனது இந்த மூளையை.

(Alan Light man எழுதிய Searching for stars on an island in Maine எனும் இயற்பியல் கட்டுரையை தழுவி.)

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Jun-19, 9:36 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 42

மேலே