போதை நாற்காலி
சாதி இல்லை என்பான்!
சாதி பார்த்து நிற்க
வைப்பான்!
தொண்டன் தெய்வம் என்பான்!
பிள்ளைக்கே பதவி
கொடுப்பான்!
ஏழ்மையில் வளர்ந்தேன் என்பான்!
சொத்து இன்றோ கோடி
கணக்கில்!
தமிழே உயிர் என்பான்!
அவன் பிள்ளை இந்தி
வகுப்பில்!
ஊழல் அழிப்பேன் என்பான்!
அவன் மேலே நிலுவை
வழக்கு!
மதுவை ஒழிப்பேன் என்பான்!
மது ஆலை பிணாமி
பேரில்!
நாடி துடிப்பு என்பான்!
நானே மக்களால் என்பான்!
நாடகம் பல நடிப்பான்!
நயமிகு வார்த்தை சொல்வான்!
துரோகம் தூவி செல்வான்!
வஞ்சக நஞ்சிறைப்பான்!
சுயநல உரம் தெளிப்பான்!
பாவத்தைப் பணமாக
அறுவடை செய்வான்!
இத்தனையும் செய்தவனே,
சனத்தைப்
பித்தனாவும் மாற்றுவிப்பான்!
எல்லாமே
உனை அடைய தான்!
சிவப்புக் கம்பளத்தில்
சிரிக்கின்றாயே!
உனை அடைய தான்!
அமர்வு மட்டுமே அவன்!
ஆட்டுவிப்பவள் நீ!
போதை தான்!
நிசமாகவே நீயொரு போதை தான்!
நாற்காலி என்கிற நஞ்சு போதை!