காத்திருக்கிறாள் இரவுமகள்
ஜெ
மலையாள பாடல்களை இங்கே அவ்வப்போது கொடுத்துவருகிறீர்கள். எதையும் எவரும் கேட்பதில்லை என்றும் எழுதியிருந்தீர்கள். நான் நீங்கள் கொடுக்கும் பாடல்களை எல்லாம் கேட்பேன். பலமுறை. உங்கள் தளம் வழியாகத்தான் நான் மலையாள மெலடி உலகுக்கே நுழைந்தேன். பைத்தியக்காரிபோல கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
இவற்றைக் கேட்பதற்கு ஒரு தனி ரசனை வேண்டும். மலையாள மொழியின் அழகு கொஞ்சம் பிடிகிடைக்கவேண்டும் [நான் பாலக்காட்டில் இளமைக்காலத்தில் இருந்திருக்கிறேன்] சம்ஸ்கிருதத்தின் அழகு ஊறிய மொழி அது. மென்மையான சொற்கள் கொண்டது. மலையாளச் சினிமாப்பாடல்களில்தான் உச்சகட்ட ரொமாண்டிஸிஸம் இருக்கிறது. பெரும்பாலான பாடல்கள் இரவையும் நிலவையும் காயலையும் பற்றியவைதான். அந்த கனவுத்தன்மைக்கு ஏற்ற அற்புதமான மெலடி மெட்டுக்கள் மலையாளத்தில் குவிந்திருக்கின்றன.
தற்செயலாக நீங்கள் கொடுத்த கஸ்தூரி மணக்குந்நல்லோ பாட்டை கேட்டேன். அதிலிருந்து ஆரம்பித்தது இந்த மலையாளப்பாட்டு பித்து. நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே செல்கிறது. நான் இன்று எம்.கே.அர்ஜுனன் மாஸ்டரின் பெரிய ரசிகை. எவ்வளவு அற்புதமான மெலடிகள் போட்டவர். இருந்த இடம் தெரியாமல் இருக்கிறார்.
நீங்கள் கொடுத்திருக்கும் பாடல் மாஸ்டரின் அழகான மெலடி. அதே காலகட்டத்தில் [1972 ல்] அதேபோல இன்னொரு பாடலும் உண்டு. சுசீலாவின் அழகான குரலில். [பார்த்தீர்களா, உங்களுக்கே சொல்கிறேன்] இருபாடல்களும் இரட்டைப்பாடல்கள் போல என்று எனக்குத்தோன்றுவதுண்டு. நக்ஷத்ர கின்னரன்மார் விருந்நு வந்நு என்றபாடல்
எஸ்.ப்ரீதா
அன்புள்ள பிரீதா,
அந்தப்பாடலும் எனக்குப் பிடித்தமானதுதான். ஆனால் நீங்கள் சொன்னபிறகுதான் இரட்டைப்பாடல் என தோன்றுகிறது. ஏறத்தாழ ஒரே காலத்தில் ஒரே மனநிலையில் போடப்பட்டிருக்கலாம்
ஜெ
நக்ஷத்ர கின்னரன்மார் விருந்நு வந்நு
நவரத்ன சித்ரவேதி ஒருங்கி நிந்நு
யாமினீ கன்யக தன் மானஸ வீணயில்
ஸ்வாகத கானம் துளும்பி நிந்நு
பால்கடல் திரமால பாடி பாதிர தென்னல் ஏற்று பாடி
சரத்கால மேளயில் முழுகான் சசிலேக மாத்ரம் வந்நில்ல
காத்திரிப்பூ ரஜனீ காத்திருப்பூ
மலர்வன ஸ்வப்னங்கள் தேங்கி
மண்ணின்றே பிரதீக்ஷ்கள் மின்னி
கரிமேக லகரியில் அலிஞ்ஞு
கனக பூந்திங்ஙள் மறஞ்ஞு
காத்திரிப்பூ ரஜனீ காத்திரிப்பூ
[தமிழில்]
நட்சத்திர கின்னரர்கள் விருந்துக்கு வந்தனர்
நவரத்தின சித்திர அரங்கு அணிகொண்டது
இரவுக் கன்னியின் மனவீணையில்
வரவேற்புப் பாடல் ததும்பி நின்றது
பாற்கடல் அலைகள் பாடின நள்ளிரவுத்தென்ற்ல் தொடர்ந்து பாடியது
முன்பனிக்கால கொண்டாட்டத்தில் மூழ்க
பிறைநிலவு மட்டும் வரவில்லை
காத்திருக்கிறாள் இரவுமகள் காத்திருக்கிறாள்
மலர்த்தோட்டத்தின் கனவுகள் மங்கின
மண்ணின் எதிர்பார்ப்புகள் மின்னலிட்டன
கருமுகிலின் மயக்கத்தில் கரைந்து பொன்நிலவு மறைந்தது
காத்திருக்கிறாள் இரவுமகள் காத்திருக்கிறாள்.
படம் புஷ்பாஞ்சலி
இசை எம் கே அர்ஜுனன்
பாடல் ஸ்ரீகுமாரன் தம்பி
பாடியவர் பி.சுசீலா
Save
Share
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
