சந்தன நதியில்…

பி.சுசீலா நிறைய மலையாளப் பாடல்களைப் பாடியிருக்கிறார். மலையாள உச்சரிப்புக்கு ஒவ்வாத ஒரு அழுத்தம் அவருடைய ற ளக் களில் உண்டு. அதோடு பொதுவாக மலையாளப் பெண்களின் குரல் அல்ல அது. ஓங்கிய மணியோசை. மலையாளப்பெண் பாடுவதுபோலவே பாடியவர் எஸ். ஜானகிதான்



ஆனால் சிலபாடல்களில் சுசீலாவின் உச்சரிப்பும் குரல்மணியோசையும் அழகாக முயங்கி அற்புதமான அனுபவமாக ஆகியிருக்கின்றன .அவற்றிலொன்று இந்தப்பாடல். சந்ந்ந்ந்ந்ந்த்ர என்னும் அந்த இழுப்பு நாற்பத்தைந்து ஆண்டுகளாக என்னை மயக்கிக்கொண்டிருப்பது.



என் பத்துவயதில் திருவந்தபுரம் ரேடியோவில் அந்தியில் இந்தப்பாடலைக் கேட்டேன். அன்று நான் பாட்டுகேட்க அம்பிகா அக்காவின் வீட்டுக்குப் போவேன். [என் அப்பா ரேடியோ போன்ற கேளிக்கைகள் குழந்தைகளுக்கு தேவையில்லை என நினைத்தவர்] அந்த அந்தியை, தென்னை ஓலைகள் மங்கலான ஒளிநிறைந்த வானில் துழாவிக்கொண்டிருப்பதை பார்த்தபடி கேட்ட சுசீலாவின் குரலை, இப்போதும் மீண்டும் சென்றடைகிறேன்







[மூலம்]



சந்த்ர ரஸ்மி தன் சந்தன நதியின்

சுந்தரியாம் ஒரு மான்பேட



பாடியாடி நீராடி

பவிழ திரகளில் சாஞ்சாடி



பள்ளிநீராட்டினு வந்நொரு

மானினே பட்டமகிஷியாய் வாழிச்சு

திங்கள் பட்டமகிஷியாய் வாழிச்சு

அவளுடே ரூபம் மாறிலமர்ந்நு

ஆத்யத்தே மதுவிது ராவுணர்ந்நு

ராவுணர்ந்நு



என்னெயொரு அத்புத சௌந்தர்யமாக்கி நீ

நின் விரிமாறில் சார்த்தும்போள்

ராக ரஞ்சினியாய் ஞான் மாறும்போள்

பிரணய பௌர்ணமி பூத்துலயுந்நு

பிரேமார்த்ர மாதவம் விடருந்நு

விடருந்நு



[தமிழில்]



சந்திரக் கதிரின் சந்தன நதியில்

சுந்தரியான ஒரு பேடைமான்.



பாடியாடி நீராடியது

பவள அலைகளில் சாய்ந்தாடியது



நீராடவந்த மானை

பட்டத்தரசியாக அமர்த்தியது

திங்கள் பட்டத்து அரசியாக அமர்த்தியது

அவள் உருவம் மார்பில் அணைய

முதல் தேனிலவு இரவு எழுந்தது



என்னை ஒரு அற்புத அழகாக ஆக்கி நீ

உன் விரிந்த மார்பில் அணிகையில்

அனுராகத்தில் மலர்ந்தவளாக நான் ஆகும்போது

காதலின் முழுநிலவு பூத்து மலர்கிறது

காதலின் முல்லைப்பூ விரிகிறது

விரிகிறது


ஸ்ரீகுமாரன் தம்பி – எம் கே அர்ஜுனன்

இசை எம்.கே.அர்ஜுனன்

பாடல் ஸ்ரீகுமாரன் தம்பி

படம் அன்வேஷணம் 1972



செண்பகம் பூத்த வானம்
கஸ்தூரி மணம்






Save
Share

எழுதியவர் : எழுதியவர் : எஸ்.ப்ரீதா & எழு (6-Jun-19, 4:15 am)
பார்வை : 53

மேலே