காதல்

புறக்கண்களால் அவள் அழகைப்பருகினேன்
பருகப் பருக இன்பத்தில் திளைத்தெழுந்தேன்
தேன் குடித்த குரங்குபோல் -அப்போது அவள் எனைப்
பார்த்த ஒரு பார்வை என் அகக்கண்ணைத் திறக்க
என் அழகின் ரசிப்பு இப்போது திசை மாறியது
அகக்கண்ணால் இதயத்தில் ஓர் புது ஒளி கண்டேன்
அது சொன்னது நான்தானடா உன்னவள் உன் காதலி
நீ தேடிய காதலும் நானே என்றது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Jun-19, 2:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 355

மேலே