நீ கொடுத்த காயங்கள் 555

உயிரானவளே...


இரு உடல் ஒரு உள்ளம்

நாம் கொண்ட காதல் அன்று...


ஆயிரம் கனவுகளோடு

என் நெஞ்சம் உலா வந்தது...


நம் வாழ்க்கையை

இன்பமாக நினைத்து...


நீ கொடுத்த முத்தத்தில்

என் இதழ்கள் சிவந்தது அன்று...


உன் ரத்த சொந்தத்தால்

என் உடல் சிவந்தது இன்று...


என் மேனியின்

காயங்கள் ஆறிவிடும்...


நீ கொடுத்து சென்ற என்

உள்ளத்தின் காயங்கள்...


மண்ணில் நான் மரிக்கும்வரை

ஆறாதடி கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Jun-19, 8:06 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1465

மேலே