காதல்

அவன் : உன் மனம் நானறிவேனடி கோல மயிலே,
மான் விழியே உந்தன் பார்வை சொல்லுதடி
உன் உள்ளத்தில் இருப்பவன் நானென்று
அதில் இடமேது வேறெவர்க்கும் என்று.
அவள் :
என் மனம் அறிந்தவனே நீ அறியாயோ,
உன் மனம் நானறிவேன் அதில் நீ
நித்தம் காதல் மலரால் அர்ச்சித்து
பூஜிக்கும் தெய்வம் நான்தான் என்று
அவன் : இப்படி ஒருவர் மனம் ஒருவர் தெளிவாய்
அறிந்தும் அருகே வர தயக்கம் ஏன் கிளியே

அவள் : காதலில் அவசரம் ஏனய்யா உமக்கு
அவசரம் தருவது வெறும் உடலறவே
நம்பு என் அன்பே, நானறிவேன் நம்
காதலில் நாம் தேடுவது அதுவல்ல நாம்
தேடுவது என்றும் நம்மை பிணைக்கும்
அன்பெனும் அரவணைப்பு


மனமும் மனமும் ஒத்துப்போனது சரியே
மன்னவனே ஆனால் இன்னும் பழகாது
நெருக்கம் கேட்டால் கிளி நான் என்ன
செய்வேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jun-19, 2:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 134

மேலே