கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை

24.06.19
"கண்ணதாசன் ஒரு காவியம்"

அற்றைத் திங்கள் இற்றை நாளில்
ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தேழில்

சிவகங்கையெனப் பொங்கும் கவியோன்
சிறுகூடல்பட்டி ஆசுகவிக் கோன்

பெற்றோர் சாத்தப்பர், விசாலாட்சி முத்தையா
தமிழ்நாடு கொண்ட தரணிபுகழ்
சொத்தையா!

முத்தமிழ் வாழ்த்தப் பிறந்த மேலோனே
எப்படிப் பொருளானாலும் எழுதும்
கோமானே

தன்னைமட்டும் பாடிய கவிகள் முன்னே
தன் வாழ்க்கையே திரைக்காகத் தந்த பொன்னே

காலத்தால் அழியாத தமிழே கண்ணதாசா
ஞாலத்தில் ஞானத்தில்
கவிகண்ட ஜாலமே

யாண்டும் இனி உன்போல் கவிஞனாரடா
மீண்டும் நீ வரவேண்டும் வருவாயா, தலைவா?


--ஹரிஹரன்

எழுதியவர் : ஹரிஹரன் (25-Jun-19, 10:53 pm)
சேர்த்தது : Hariharan
பார்வை : 790

மேலே