கடல் ஜுரம் மூலம் ஜான்மேன்சபீல்டு தமிழாக்கம் வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன்
கடல் ஜுரம்
( மூலம் : ஜான்.மேன்சபீல்டு; தமிழாக்கம் : வாசவன்)
நான் போகவேண்டும் கடலைத் தேடி
அந்த தனிமையான கடலுக்கு, விண்ணிற்கு
நான் கேட்பதெல்லாம் உயர்ந்த ஓர் கப்பலும்
நட்சத்திரமும் அதை செலுத்த ,
மற்றும் சக்கரத்தின் விசை , காற்றின் கீதம்
அந்த காற்றிலாடும் பாய்மரமும்
கடல் மீது படிந்த வெளிறின பனிமூட்டம்
மற்றும் வெளிறின காலை வேளை.
நான் போகவேண்டும் மீண்டும் கடலுக்கு
அந்த அலைகளின் அழைப்பிற்கு
மற்றும் முரட்டு ஆனால் தெளிவான அழைப்பு,
முடியாது என்று சொல்ல முடியாது
மற்றும் நான் கேட்பதெல்லாம் வெண்மேகம் பறக்கும்
ஒரு காற்றடிக்கும் நாள், மற்றும் பரவி இருக்கும்
நீர்திவலைகளும் கடல் nuraiyum,
நான் போகவேண்டும் மீண்டும் கடலுக்கு
மற்றும் அந்த திரிந்தோடும் நாடோடி வாழ்வு
மற்றும் கடற்பறவைப் பாதையும்
திமிங்கிலங்கள் பாதையும்
மேலும் நான் வேண்டுவதெல்லாம்
என்னுடன் பயணிக்கும் படகோட்டியின் கொட்டாவி,
மேலும் அமைதியான தூக்கம்
மற்றும் இனிமையான கனவு .