மின்னல்
மின்னல் 💥
மின்னலன அவள் பார்வை
அவன் மீது பட்டதும் கருகவில்லை, பார்வையில் உருகிவிட்டான்.
அழகு சிற்பம்
அவளிடம் ஆண்மகனாக சென்று
காதல் சொல்ல
அற்புத ஓவியத்தின்
கண் அசைவு அவனைஆனந்த கூத்தாட செய்து,
ஆகாயத்தை தொட செய்தது.
இதய ராணியே!
இதிகாச பேரழகியே!
இதயகனியே!
இன்ப சுரங்கமே!
இந்திரலோகத்து
சுந்தரியே!
ஏக போகமாக வர்ணனையுடன்
அவளை வரவேற்று
இன்னும் இளமை மாறா தமிழ் சொற்களால்
அலங்காரம் செய்தான்.
வின்னில் இருந்து
இறங்கி வந்த அதிசயமே!
கோடி மலர் குவிந்த வண்ண சித்திரமே!
ஒட்டு மொத்த நட்சத்திரம் கூட்டம்
ஒரு சேர சேர்ந்து ஜொலிக்கும் கண்ணை பறிக்கும் பரகாசமே!
அண்ண நடை நடந்து வந்து என்னிடம் புதுமை தமிழில்
புலவர் போல் பேசிய எழில் நிலவே!
உன் காந்த விழிகள்
என் உயிரை உலுக்க,
அற்புதமே!
உன் சிங்கார புண்ணகை
எனக்கு காதல் அங்கீகாரம் தர
உன் இளமை இடையை
என் இரு கரம் கொண்டு பற்றி வளைந்து
உன் அகங்கார முன்னழகை என்னோடு அனைத்து
உன் கள் வடியும் இதழில்
என் இதழ்களால் என் காதல்
எண்ணங்களை உன்னுள் எழுதினேன்.
- பாலு.