வெண்பாவாடி நீ பெண்ணே

வெண்பாவிற்கு அழகு சீரான சீரும் அடியும்
அங்கங்களாய் எதுகையும் மோனையும் என்றால்
வஞ்சிக்கு அழகு மாசிலா முகமும் அன்ன நடையும்
வஞ்சமில்லா புன்னகையும் அன்பொழுகும் நேசமும்
இவ்விலக்கணம் உன்னில் கண்டேன் அதனால்
பெண்ணே உன்னைக் கவிஞன் நான் வெண்பாவையே
என்று அழைத்திடவா சொல்லடி நீயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Jun-19, 1:57 pm)
பார்வை : 133

மேலே