இனிய காலை நேரம்
அதிகாலை நேரம்
ஆதவன் உதிக்கும் நேரம்
அமரரும் விரும்பும் நேரம்
கற்பனை எல்லையும் முட்டும் நேரம்
தூய எண்ணங்கள் அலைமோதும் நேரம்
உள்ளமும் தூய்மையடையும் நேரம்
ஞானிகள் உருவாகும் நேரம்
இனிய கீதம் பிறக்கும் நேரம்
குயில் கூவி பாடி இன்னிசை
உருவாக்கும் நேரம்
ஓதும் வேதத்தின் உட்பொருள்
ஓதுவார்க்கு உணர்த்தும் நேரம்
ஞானிகளும் விஞானிகளும்
ஒருங்கே புகழ்ந்து போற்றும் நேரம்
துயில் நீக்கி நமக்கு முழுத்திக்கொள்ள
சேவலும் கூவும் நேரம்
இளங் காலை நேரம்
சோலையில் மலர்கள் பூத்துகுங்கும் நேரம்
தடாகத்தில் தாமரை அலர்ந்திடும் நேரம்
ஈசனுக்கும் உகந்த நேரம்
இனிய காலை நேரம்
அதுவே ஈசனுக்கும் உகந்த நேரம்