காற்றில் உதிர்ந்த உதிரிப்பூ

காற்றில் உதிர்ந்த உதிரிப்பூ
பாதையில் உருண்டு ஓடி
சாலையில் நடந்த பாவையின்
பாதத்தில் பட்டுச் சிரித்தது
கையில் எடுத்து அதை அவள் முகர்ந்த போது
அவள் சுவாசத்தின் வாசத்தில்
புது வாழ்வு கிடைத்ததாக மகிழ்ந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-19, 10:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 459

மேலே