பாதித் திரி எங்கடா போச்சு

பாட்டிம்மா, என்னப் பாக்க என் வகுப்புத் தோழன் ஒருத்தன் வந்தானா?
@@@@@
ஆமாம்டா மணியரசா..செவப்பா, ஒயரமா ஒரு பையன் வந்தான்.
@@@@@
அவம் பேரக் கேட்டியா?
#@####
அவன் என்னமோ சொல்லி 'திரிபாதி'
-ன்னு சொன்னான்டா. அவன நாங் கேட்டேன் "ஏன்டா திரிபாதி'ன்னு சொல்லறயே பாதித் திரி எங்கடா சாமி போச்சுனு கேட்டேன். அவன் திருதின்னு முழிச்சான். பாதி வெளக்கில எரிஞ்சு போச்சான்னு கேட்டேன். அவஞ் சிரிச்சிட்டே போயிட்டான்டா மணி.
@@###
பாட்டிம்மா அவன் தாய் மொழி இந்தி. தமிழ் ஓரளவு புரியும் அவம் பேரு நட்வார் திரிபாதி. ஆர்வக் கோளாறில அவம் பேருக்கு என்ன அர்த்தம்னு கேக்காதீங்க எனக்குத் தெரியாது.

எழுதியவர் : மலர் (2-Jul-19, 1:52 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 160

மேலே