கள்ள மனம்

வெங்காயத்தை உறிப்பவளின்
மனது பூட்டப்பட்டிருந்தது
உடைகளால்
ஓவியத்தை வரைபவளின்
மனது பூட்டப்பட்டிருந்தது
உடைகளால்
சிரித்துக்கொண்டிருப்பவளின்
மனது பூட்டப்பட்டிருந்தது
உடைகளால்
தியானத்தை தொடர்பவளின்
மனதும் பூட்டப்பட்டிருந்தது
உடைகளால்
தூக்கத்தை தொடர்பவளின்
மனதும் கூட பூட்டப்பட்டிருந்தது
உடைகளால்
எப்போதும் அலைபாயும் என்
மனதை நிர்வாணப்படுத்த
துணிவில்லாத எழுத்துக்கள் கூட
பூட்டப்பட்டிருக்கிறது
நேர்மை எனும் கள்ளச்சாவியால்!.............