எண்சீர் வண்ண விருத்தம்

எண்சீர் வண்ண விருத்தம் ...!!!
******************************************
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தனதானா

பணிவொடு குட்டிப் பரிவொடு தொட்டுப்
பதமலர் பற்றித் தொழுதிட மகிழ்வோனே !
துணையென நெற்றித் திலகமு மிட்டுத்
துயரினை விட்டுத் தெளிவுற அருள்வாயே !
பிணியொடு சுற்றிக் கவலது முற்றிப்
பிரிவினை யுற்றுக் கதியிலை கணநாதா !
கனிவுட னிற்றைப் பொழுதினி லொற்றைக்
கரிமுக வெற்றிக் கனிதர வருவாயே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Jul-19, 6:55 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 44

மேலே