அன்பை சுமந்துகொண்டு

தென்றலோடு சண்டையிட
பிடிக்கும் என்பாள்
தேனை ருசிபார்க்க அதைவிட
பிடிக்கும் என்பாள்
பூனைகளோடு உறவாடியும்
புறாக்களோடு கதைகள் பேசியும்
பொழுதை கழிப்பவள் இன்றுவரை
திறந்து காட்டவே இல்லை
அவள் மனதை ஏக்கத்தோடு
............................பெருமழையாய் நான்!!.............


************************** **********************

எறும்பு கடித்ததால் வீங்கியிருந்த
கன்னங்களை கண்டு காதலியாய்
பதறியவள் என்னை தவிர
வேறு யார் கனவில் வந்து
கன்னங்களில் முத்தமிட்டது எனும்போது
மனைவியாய் மாறிப்போயிருந்தாள்
அதிகப்படியான அன்பை
..............................சுமந்துகொண்டு!!!!..........

எழுதியவர் : மேகலை (5-Jul-19, 12:46 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : anbai sumanthukondu
பார்வை : 441

மேலே