யார் இவள்

யார் இவள்?
=============================================ருத்ரா

நான்
எழுதுவதன் சொல்லுக்குள்
எழுதுமுன்னேயே
நுழைந்து விடுகிறாள்.
நான் துடிக்கும் இதயத்துள்
என் வால்வுகள் திறக்குமுன்னே
அங்கு போய் துடித்து துடித்து
வதம் செய்கிறாள்.
நான் செல்ஃபோன் தொட்ட போதே
ஹாய்..என்னடா மேட்டர்.சொல்லுடா லூசு
என்கிறாள்.
என்னொடு அவள்.அவளோடு நான்.
உன் முகம் காட்டு என்றேன்.
வானத்தைப்பார் என்கிறாள்.
ஒன்றும் புரியவில்லையா?
கட கடவென சிரிக்கிறாள்.
என்னை நினைத்துக்கொண்டே
அந்த மேகத்தைப்பார் என்றாள்.
அப்படியே பார்த்தேன்.
என்ன ஆச்சரியம்?
அந்த குறிப்பிட்ட மேகம்
அச்சு அவளே தான்..
அதை அந்த மேகம் கலையும் முன்னே
அவளைக் "கைப்பிடித்தாக வெண்டும்"
முட்டி மோதிக்கொண்டு ஓடுகிறேன்.

...........................
.............................

அந்த தினச்செய்தியில்
ஒரு இளைஞன் விபத்தில் ரத்த வெள்ளமாய்க் கிடந்தான்.
அந்த ரத்தச்சேறு கூட ஒரு பெண்ணின்
"சைடு போஸ் சிரிப்பு போல‌
உதடுகள் காட்டி "ஏதோ சிரித்துச்சொனது.

=========================================================

எழுதியவர் : ruthraa e paramasivan (12-Jul-19, 11:15 am)
சேர்த்தது : e.paramasivan RUTHRAA
Tanglish : yaar ival
பார்வை : 85

மேலே