மாய மேகத் தோற்றத்தாளே

செந்தங்கமே தங்கம்
செப்பாய் நானும் மாறி
காத்திருக்கேன்டி தங்கம்

சேர நீயும் சிறப்பாய் வந்தால்
சேர்மமாய் மாறி சிறப்பாய் வாழ
சிறு வழி கிடைக்குமடி தங்கம்

சிறு விழி சுருக்கி சிரித்ததாலே
சிரசில் ஒரு கிறுகிறுப்படி
சின்னதாய் ஒரு சிலிர்ப்படி

மனதில் ஒரு மாயம் புரிந்தவளே
மயங்கினேன் மகுடி பாம்பாய்
மாவடும் இனிக்குதடி உன் நினைப்பால்

மாய மேகத் தோற்றத்தாளே
மன்மதன் எரிந்த அம்பைப்போல
மண்டையைக் கிளறுதடி காதல் எண்ணம்

மண்ணில் ஒரு மகத்துவம் செய்ய
மணக்கும் மல்லியே மறுக்காதே
மாமாவின் மாசற்ற காதலை.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Jul-19, 10:45 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 43

மேலே