கிறுக்கன்

விழி பேசும்,மொழி மறக்கும்
உணர்வும்; உயிரும்
புறம் பார்த்து, அகம் எழும்
உறுத்தல்; காதல்.
நிலம் பார்த்து,நகம் ரசிக்கும்
தத்தை; வெட்கம்.
இடை கோணி, விரல் புனையும்
கோலம் கிறுக்கி.
வினை எதிர்த்து, உனை வருத்தும்;
கோபம்; வறட்டு.
சிந்தை சிதற, செயல் மறந்து
முடக்கம்; மயக்கம்.
சொல் கடிந்து, செவி மடிந்து
நிலைமை; கொடுமை.
உடல் ஈர்த்து, உயிர் ஈந்து,
மரிக்கும்; வீணாய்.

எழுதியவர் : து.கிருஷ்ணமூர்த்தி (13-Jul-19, 8:49 am)
சேர்த்தது : கிருஷ்ணமூர்த்தி
Tanglish : kirukan
பார்வை : 98

மேலே