பசி

கண்கள் களைத்து
கன்னம் வதங்கி
வயிறு சுருங்கி
வார்த்தைகளின்றி வாதம் அடைந்து
நாடி நரம்பெல்லாம்
ஆடி போய்
நகைச்சுவையும்
அறுசுவையும் மறந்து
விஷம் கொடுப்பினும்
அமுதென்று அருந்த
மெல்ல பேசவும்
நடந்து செல்லவும் வலுவிழந்து யாரிடமும் கடன் கேட்கா இந்த இதயம் முதல் முறையாய் கையேந்தி
;கண்கள் கெஞ்சி
பிறர் திட்டும் பொழுதும்
மனம் பட்டும் படாமல்
புத்தி இழந்து
சக்தியற்ற வேலையிலும
கத்தி எடுத்து ஓங்கி யாரோ
வயிற்றில் குத்தியது போல்
வலித்தது எனக்கு ..
என்னவென்று கேட்டால்
தீராத பசியாம் !!!

எழுதியவர் : அ .கிஃபா (14-Jul-19, 4:15 pm)
சேர்த்தது : kifa
Tanglish : pasi
பார்வை : 30

மேலே